சென்ற இதழ் தொடர்ச்சி...

ந்த லக்னாமாயினும் செவ்வாய் 10-லும், சனி 11-லும் இருக்கும் பலன்...

செவ்வாய் 10-லிருந்து தனது எட்டாம் பார்வையாலும், சனி 11-லிருந்து தனது ஏழாம் பார்வையாலும் 5-ஆமிடத்தை எட்டிப் பார்ப்பர்.

செவ்வாயின் எட்டாம் பார்வை 5-ஆமிடத்திற்கு விழுகிறது. கூடவே சனியின் நேர் பார்வையும்.

Advertisment

5-ஆமிடம் குழந்தைகளைக் குறிக்கும். இவ்வித ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு பிள்ளைகளால் நன்மை இராது. இவர்களின் குழந்தை களும், "அப்பன் பெயரை டேமேஜ் பண்ணிவிட்டுத்தான் மறுவேலை' என்று ஒற்றைக்காலில் நிற்பர். இவர்களின் குழந்தைகள் "உட்காரு' என்றால் நிற்கும். "நில்' என்றால் ஓடிவிடும். ஒரு காலகட்டத்தில் ஏன்தான் பிள்ளையைப் பெற்றோம் என்று நொந்துகொள்கிற அளவுக்கு வந்துவிடும்.

சிலரின் பிள்ளைகள், கொஞ்சமும் பொருத்த மில்லாத வாழ்க்கைத்துணையைக் காதல் திருமணம் செய்துகொள்வர். அது ஜாதகரின் குல ஆச்சாரத் திற்கு மிகவும் எதிராக இருக்கும். வெறுத்துப்போய், வெளியே தலைகாட்ட முடியாத நிலை ஏற்படும்.

10, 11-ல் உள்ள செவ்வாயும் சனியும் இந்த ஜாதகர்கள் தங்கள் குழந்தைகள் சம்பந்தமாக கண்ட கனவுகளை- லட்சியங்களை தகர்த்து விடுவார்கள்.

Advertisment

பங்குவர்த்தகம் இவர்களுக்கு சரிப்பட்டு வராது. இவர்கள் வாழ்வில் காதல் எனும் பேச்சுக்கூட வரக்கூடாது. பெரும் அவமானம் வந்துவிடும். இவர்கள் எந்த கெட்ட பழக்கத்தின் பக்கத்திலும் போகக்கூடாது. குடி, போதை போன்றவற்றால் குலத்திற்கே அவமானம் வரக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிடும்; கவனம்தேவை.

பரிகாரங்கள்

குழந்தைகளைப் பற்றி வீண் பெருமை பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை பைரவருக்கு அகல் விளக்கில் 19 மிளகை சிவப்புத்துணியில் கட்டி, சிவப்பு நிறத்துணி திரி போட்டு, புங்கம் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றவும். அடுத்தவர் குழந்தைகளை கேலி செய்ய வேண்டாம்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தை களுக்கு உதவவும்.

மேற்கல்விக்கு பணம் தேவைப்பட்ட மாண வர்களுக்கு உதவுங்கள்.

மலைமேலுள்ள முருகரை வணங்கவும்.

சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றவும்.

குழந்தை தெய்வங்களான குருவாயூரப்பன், பழனி தண்டாயுதபாணி, பாலமுருகன் போன்ற தெய்வங்களை வணங்கவும்.

ஜாதகத்தில் லக்னாதிபதியும், 5-ஆம் அதிபதியும் சுபத்தன்மை பெற்றிருப்பின், மேற்கண்ட தீய நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு குறைவு.

எந்த லக்னமாயினும் செவ்வாய் 11-லும், சனி 12-லும் அமர்ந்த பலன்...

செவ்வாய் 11-லும், சனி 12-லும் அமர்ந்து 2-ஆமிடத்தையும், 6-ஆமிடத்தையும் நோக்குவர்.

yyy

செவ்வாய் தனது நான்காம் பார்வை யாலும், சனி தனது மூன்றாம் பார்வையாலும் இரண்டாமிடத்தை இறுகப் பார்க்கிறார்கள்.

2-ஆமிடம் குடும்ப ஸ்தானம். ஒருவருக்கு குடும்பம் என்னும் ஒன்றை நிர்ணயிக்கும் போது, அவருக்குத் திருமணமாகி, மனைவி யுடன் உள்ள நிலையே கணக்கில் கொள்ளப் படுகிறது. பிறந்தவீட்டு சொந்தம் ஆயிரம் இருந்தாலும், கணவன்- மனைவி என்றே குடும்ப உறவு குறிக்கப்படுகிறது. சில குடும்பங்களில் திருமணமானபிறகு, அந்த ஆண்மகனுக்கு தனியாக கோவில் வரி போடுவார்கள். எனவே திருமணம்தான் ஒரு மனிதனை முழுமையாக்கு கிறது. இந்த அருமையான இடத்தை செவ்வாயும் சனியும் முறைத்துப் பார்க்கும்போது, சற்று குளறுபடிதான்.

இந்த அமைப்புப்படி தம்பதிகளில் ஒருவருக்கு அடிக்கடி நோய்த்தாக்கம் இருக்கும்.

இருவரில் ஒருவருக்கு, அவர்கள் நினைத்த வண்ணம் வாழ்க்கைத்துணை அமையால் போகலாம். இதனால் அடுத்தவர்மீது எப்போதும் சிடுசிடுவென்று கோபப்படுவர்.

"நயன்தாரா மாதிரி மனைவி வரணும்' என்ற கற்பனையில் இருந்திருப்பார். மனைவியும் அவ்வாறே. ஆனால் நிஜத்தில் எதிர்ப்பதமாக இணை அமைந்துவிடும். இதனால் இவர்கள் இல்லறம் நல்லறமாக இல்லாமல் போய்விடும். 12-ல் உள்ள சனி, படுக்கை விஷயத்தை படுபாதாளத்தில் தள்ளிவிடுவார். சிலர் குடும்பத்தில், பிறன்மனை நோக்கும் சூழ்நிலை உண்டாகக்கூடும். வாழ்க்கை பிறழும் அபாயம் உண்டு.

2-ஆமிடத்தில் சுபர் அல்லது 2-ஆமிடத்தை சுபர் பார்த்திருந்தால், குடும்பம் ஏதோ முணுமுணுப்புகளுடன் ஓடிவிடும்.

பரிகாரங்கள்

இவ்வமைப்புள்ளவர்களுக்கு, அவர்களின் விருப்பமும், எதிர்பார்ப்பும் அறிந்து, அவர்களின் முழு சம்மதத்துடன் திருமணம் நடத்தவும்.

பைரவருக்கு, அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, 24 மிளகை வெள்ளைத் துணியில் முடிந்து, தாமரைத்தண்டு திரியில் விளக்கேற்றவும்.

மொச்சைப்பயறு, சுண்டல் நைவேத்தியம் செய்து விநியோகிக்கவும்.

மகாலட்சுமியை வெள்ளிக்கிழமைதோறும் விரதமிருந்து வணங்கவும். இதனால் ஓரளவு திருப்தியான மணவாழ்வு அமையும்.

முடிந்தால் சுந்தர காண்டம் படிக்க லாம்.

ஏகாதசி விரதமும், கிருஷ்ணர் வழிபாடும் நன்று.

திருத்தணிகை முருகனை வழிபடவும்.

செவ்வாய் 11-ல் இருந்து தனது எட்டாம் பார்வையாலும், சனி 12-ல் இருந்து தனது ஏழாம் பார்வையாலும் 6-ஆமிடத்தை கவனிப்பர்.

இருவரின் பார்வையும் 6-ஆமிடத்தில் விழுவதால், வட்டி கட்டுவது என்ற நிலை அனேகமாக இவர்கள் வாழ்வில் இராது.

அதாவது கடன் வாங்க முயற்சிக்கவே மாட் டார்கள். 6-ஆமிடம் திருட்டுக்குரிய இடம்.

இவர்களிடமிருந்து ஒரு பைசாகூட ஒருவ ராலும் திருடமுடியாது. தசாபுக்திகள் சரியில் லாமல் இருந்து, ஒருவேளை சிறைச் சாலைக்குப் போனாலும், உடனடியாக அதிலிலிருந்து வெளிவந்துவிடுவார்கள்.

6-ஆமிடம் சேவை ஸ்தானம். இதில் ஒருவித கணக்குப்படி, "மக்களுக்காக சேவை செய்கிறேன்; பிறந்ததே அவர்களுக்காகத்தான்' எனக்கூறி செம புகழடைந்துவிடுவர். பிறருக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிக்கும் அளவு உயர்ந்துவிடுவர். வருகிற பணத்தை வீடு, கடை கட்டி வாடகை வசூலிப்பர்.

ஒருவகையில் 6-ஆமிடத்தைப் பார்க்கும் செவ்வாய், சனி தீமைகளை நீக்குவர் என்றே கூறலாம்.

பரிகாரம் தேவையில்லை.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 94449 61845